ஆர்.பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மற்றும் ஆட்சிப் பணியில் சிறந்த சாதனைகள் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவராகப் புகழ் பெற்றுள்ளார். ஆய்வாளர் மற்றும் படைப்பாளர் என்ற இரு தளங்களில் 15 நூல்களின் ஆசிரியராக உள்ள இவர், சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளை ஒப்பிட்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட நூல்களால் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 1984-ல் இந்திய ஆட்சிப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா மாநிலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து, 2018-ல் ஓய்வு பெற்ற பிறகு, 2024 வரையில் முன்னாள் முதல்வரின் ஆலோசகராக பணியாற்றினார்.














