வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி ஜான் ஜே ஹாப்பீல்டு மற்றும் கனடாவில் வாழும் இங்கிலாந்து விஞ்ஞானி ஜெப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்தது. சக்திவாய்ந்த எந்திரக் கற்றலுக்கான அடிப்படைக் கருத்துகளை உருவாக்கியதற்காகவே இந்த பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான பரிசுத் தொகை சுமார் ரூ.8.39 கோடி ஆகும்.
வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு பகிரப்பட்டுள்ளது. டேவிட் பெக்கர், டெமிஸ் ஹாசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. புரதத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்கான ஆராய்ச்சிக்காகவே இந்த மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.














