ஏசி இல்லாத விரைவு ரயிலுக்கு அம்ருத் பாரத் என பெயர் தேர்வு

December 11, 2023

வந்தே பாரத் ரயில் போன்று ஏசி இல்லாத விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது ஏசியில் சொகுசு மற்றும் விரைவு பயணம் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை - கோவை, சென்னை-மைசூர், சென்னை- விஜயவாடா, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களில் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று குளிர்சாதன பெட்டி இல்லாமல் குறைந்த கட்டணத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் […]

வந்தே பாரத் ரயில் போன்று ஏசி இல்லாத விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது ஏசியில் சொகுசு மற்றும் விரைவு பயணம் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை - கோவை, சென்னை-மைசூர், சென்னை- விஜயவாடா, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களில் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று குளிர்சாதன பெட்டி இல்லாமல் குறைந்த கட்டணத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து ஆரஞ்சு நிறத்தில் 22 பெட்டிகளுடன் சில மாற்றங்கள் செய்து வந்தே பாரத் ரயில் போன்ற ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை எனினும் வந்தே பாரத் ரயில் போன்று உள்ளதால் இதற்கு அம்ருத் பாரத் என பெயர் வைக்கப்படும் என்றும் தெரிகிறது. இது மணிக்கு 130 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லும். மேலும் 12 தூங்கும் வசதியுடன் இரண்டாம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொது பெட்டிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu