கடந்த வாரங்களில் கொரொனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இ௫ந்தது. சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத்தொடங்கிய நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2208 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆகமொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடி 46 லட்சத்து 49088 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் தொற்று பாதிப்பினால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது.
மறுபுறம் கடந்த ஒரு நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,619 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 219 கோடியே 75 லட்சத்து 36 ஆயிரத்து 041 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.