அமெரிக்க அதிபர் டிரம்ப், பரஸ்பர வரி வசூலை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசிய போது, பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:
"நான் வர்த்தகத்தில் பரஸ்பர கட்டணங்களை வசூலிப்பேன் என்று முடிவு செய்துள்ளேன். எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கின்றன என்பதைக் கொண்டு, நாம் அதே அளவு வசூலிப்போம். அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை. அவர்கள் எங்களிடமிருந்து வரி மற்றும் கட்டணங்களை வசூலிக்கின்றனர், இப்போது நாங்களும் அதே வரி மற்றும் கட்டணங்களை அவர்களிடமிருந்து வசூலிப்போம். இந்தியா மற்ற நாடுகளை விட அதிக வரி விதித்துள்ளது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு செய்ய வேண்டிய காரியம், சீனா இதை முன்னதாக செய்தது" என அவர் தெரிவித்துள்ளார்.