ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 720 உயர்ந்துள்ளது.
தங்கம் கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்தும், நேற்று சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 90 உயர்ந்து 6,920 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 720 உயர்ந்து 55 ஆயிரத்து 360 க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் வரை 54 ஆயிரத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 55 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேபோன்று வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ரூபாய் 100.50 க்கும், ஒரு கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 1,00,500க்கும் விற்பனையாகிறது.