தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் சற்று குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக உயர்ந்துவருகிறது. செப்டம்பர் 1-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 6,695 ரூபாயாக விற்கப்பட்டது, ஆனால் 19-ம் தேதி அது 7,280 ரூபாய்க்கு உயர்ந்தது. இந்நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது 58,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை நிலையாகவே உள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.