சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறி மாறி காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் 6,666 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து 97 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது