பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் கட்டப்பட்டுள்ள பன்னாட்டு புதிய விமான முணையத்தை திறந்து வைப்பதற்காக இன்று திருச்சி வருகிறார்.
திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பன்னாட்டு புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். அதன் பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 19,850 கோடி ரூபாய் அளவில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என் ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.