மதுரையில் கலைஞர் நூலகத்தை ஜூலை 15-ந் தேதி முதல்-அமைச்சர் திறக்கிறார்

மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை ஜூலை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிடத்திற்காக ரூ.99 கோடியும், நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ரூ.5 கோடியும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2,13,288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இந்த நூலகத்திற்கான கட்டுமானப் […]

மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை ஜூலை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிடத்திற்காக ரூ.99 கோடியும், நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ரூ.5 கோடியும் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2,13,288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கலைஞர் நினைவு நூலகத்தின் முன்பகுதியில் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது. மாடியில் மாடித் தோட்டம், அங்கு புத்தகங்களை வாசிக்கும் வசதி ஆகியவை அமைக்கப்படும். இந்நிலையில் உலகத் தரத்துடன் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu