பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி இன்று நடை பெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளர்கள், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். அதில் ஒரு வாக்கு பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேவைக்கு ஏற்ப வாக்குப்பதிவு எந்திரங்கள் இரண்டு மற்றும் மூன்று என அமைக்கப்பட உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிப்பு பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.