நாளை முதல் புதிய தொலைதொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் அமலுக்கு வருகின்றன.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது இரண்டு அவைகளிலும் புதிய தொலைதொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றது. அதன்படி 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெலிகிராம் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த புதிய தொலைதொடர்பு சட்டத்தில் அவசர காலங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்களின் கட்டுப்பாட்டை ஏற்க அரசு அதிகாரம் வழங்கும் விதிகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி 1,2,10 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உள்பட புதிய தொலைதொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சட்டத்தில் புதிய சிம் கார்டு இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது