ரிசர்வ் வங்கி 2023ம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7% இருக்கும் என கணித்துள்ளது

October 1, 2022

ரஷ்யா-உக்ரைன் போரால் தூண்டப்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் 2023ம் நிதியாண்டிற்கான பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி தற்போது பெஞ்ச்மார்க் கடன் ரெப்போ விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி 5.9 சதவீதமாக்கியுள்ளது. அதேசமயம் சில்லறை பணவீக்கத்தை 2-6 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டியதுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், 2022-23 செப்டம்பர் காலாண்டில், ரிசர்வ் வங்கியானது சில்லறை பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. […]

ரஷ்யா-உக்ரைன் போரால் தூண்டப்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் 2023ம் நிதியாண்டிற்கான பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தற்போது பெஞ்ச்மார்க் கடன் ரெப்போ விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி 5.9 சதவீதமாக்கியுள்ளது. அதேசமயம் சில்லறை பணவீக்கத்தை 2-6 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டியதுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், 2022-23 செப்டம்பர் காலாண்டில், ரிசர்வ் வங்கியானது சில்லறை பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. மூன்றாவது காலாண்டில், பணவீக்கம் 6.5 சதவீதமாகவும், மார்ச் காலாண்டில் 5.8 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. அதனை தொடர்ந்து SDF விகிதம் 5.65% ஆகவும், MSF விகிதம் 6.15% ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6.7% ஆக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாகவும் ௯றினார். மேலும் உலக அளவில் பணவீக்கத்தின் தாக்கம் உள்நாட்டு சந்தையை பெரிதும் பாதிக்கிறது என்றும் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu