பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறுகிறது.
நாடும் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஆறு கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்தது. இந்நிலையில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் சென்னை மாநகராட்சி எல்லையின் அடிப்படையில் 18 சட்டமன்ற தொகுதிகள் மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டுள்ளது. வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் ஓட்டுகள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலை ஆகிய மூன்று மையங்களில் நடைபெறுகிறது. மேலும் இப்பணியில் 1433 அலுவலக அதிகாரிகள் ஈடுபட உள்ளார்கள். அவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேசைக்கள் வீதம் குறைந்தது 13 சுற்றுகள் முதல் 23 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தபால் வாக்குகள் யார் யார் எவ்வளவு பெற்றார்கள் என்று எண்ணப்பட உள்ளது. பின்னர் 8.39 மணி அளவில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களின் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கும். அதன்படி முதல் சுற்றும் முடிவுகள் காலை 9:45 மணிக்கு வெளியாகும்