இன்று முதல் தமிழக வருவாய் அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர், சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டமானது பழைய ஓய்வுதிய, திட்டம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் இதனால் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.