செவ்வாய் கிரக வாழிடத்தில் ஒரு வருடம் தங்கும் விஞ்ஞானி கெல்லி ஹெஸ்டன்

செவ்வாய் கிரகத்தைப் போலவே இருக்கும் வாழிடம் ஒன்றை நாசா உருவாக்கியுள்ளது. இந்த வாழ் இடத்தில் ஒரு வருடம் தங்குவதற்கு, கனடாவை சேர்ந்த விஞ்ஞானி கெல்லி ஹெஸ்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு சென்று தங்க வேண்டும் என்பது ஹெஸ்டனின் குழந்தைப் பருவ கனவாக இருந்தது. தற்போது 52 வயதாகும் அவருக்கு, அவரது கனவை எட்டும் வகையில் செவ்வாய் கிரக வாழிடத்தில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் மாத இறுதியில், அவர் ஹவுஸ்டனில் அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரக வாழிடத்திற்குள் […]

செவ்வாய் கிரகத்தைப் போலவே இருக்கும் வாழிடம் ஒன்றை நாசா உருவாக்கியுள்ளது. இந்த வாழ் இடத்தில் ஒரு வருடம் தங்குவதற்கு, கனடாவை சேர்ந்த விஞ்ஞானி கெல்லி ஹெஸ்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு சென்று தங்க வேண்டும் என்பது ஹெஸ்டனின் குழந்தைப் பருவ கனவாக இருந்தது. தற்போது 52 வயதாகும் அவருக்கு, அவரது கனவை எட்டும் வகையில் செவ்வாய் கிரக வாழிடத்தில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் மாத இறுதியில், அவர் ஹவுஸ்டனில் அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரக வாழிடத்திற்குள் செல்ல உள்ளார். அவருடன் சேர்ந்து 3 பேர் அங்கு வசிக்க உள்ளனர்.

செவ்வாய் கிரக வாழிடத்திற்குள் வசிக்க உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை நாசா ஏற்படுத்தி தர உள்ளது. இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கருவிகள் கோளாறு போன்ற சில சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில், செவ்வாய் கிரக வாழ் இடத்தில் தங்குவதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இவர்களை வைத்து ஆய்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu