உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு ஸ்பைக் புரதம் காரணம்

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் இல்லாத நிலையே தொடர்கிறது. அடுத்தடுத்து டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என வீரியமுடன் உருமாற்றம் பெற்று அவை நாடுகளிடையே பரவி வருகின்றன. இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதுபற்றிய அறிக்கையை ஜர்னல் இலைப் என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். அதில் தொடக்கத்தில் கொரோனா வைரசில் உள்ள ஸ்பைக் எனப்படும் […]

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் இல்லாத நிலையே தொடர்கிறது. அடுத்தடுத்து டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என வீரியமுடன் உருமாற்றம் பெற்று அவை நாடுகளிடையே பரவி வருகின்றன. இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதுபற்றிய அறிக்கையை ஜர்னல் இலைப் என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். அதில் தொடக்கத்தில் கொரோனா வைரசில் உள்ள ஸ்பைக் எனப்படும் புரத வகையானது அதிகம் நெகிழ்வு தன்மை கொண்டது. அதன் ஸ்டெம் பகுதியில் கட்டுகளாக அவை பின்னி, பிணைந்து இருந்தன.ஆனால் காலப்போக்கில், உருமாற்றம் அடையும்போது அந்த புரதங்கள் இறுக்கம் அடைந்து, அதிக கடினம் வாய்ந்து, வலிமையடைந்த ஒன்றானது. அது தற்போது அதிகம் இறுகி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu