சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 9 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 18 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்.ஜான் சத்யன், வி.லட்சுமிநாராயணன், எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, ஆர்.நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் மாவட்ட நீதிபதிகளான பி.வடமலை, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 3 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.