ட்ரூஸ் மக்களின் மீது அரசு படைகள் தாக்கியதாக எழுந்த புகாருக்கு பின்பு, இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்தத்துடன் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினரும் பெடொய்ன் பழங்குடியினரும் இடையே ஏற்பட்ட மோதலில் அரசுப் படைகள் தலையிட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து ட்ரூஸ் மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரிய ராணுவ தலைமையகத்தை தாக்கியது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா கடுமையான எச்சரிக்கை விடுத்தார். பின் அமெரிக்கா, துருக்கி, அரபு நாடுகளின் வழியே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் உடன்பாடு கிடைத்தது. சண்டை முடிவடைந்த நிலையில், சிரிய இராணுவம் ஸ்விடா பகுதியிலிருந்து வெளியேறியுள்ளது. மோதலிலும் தாக்குதலிலும் 374 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.