ஜூன் 24 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை

வருகிற ஜூன் 24ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையாற்றினார். அதற்கு மறுநாளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி […]

வருகிற ஜூன் 24ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையாற்றினார். அதற்கு மறுநாளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் கூடுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் 24 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முறை நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் விவகாரம், குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஆலோசிக்க பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu