தமிழக அமைச்சரவை கூட்டம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூட்டப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை அறையில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்த குறிப்புகள் இனி தனியே அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.