தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதற்கு முன் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் அரசு துறைகள் மீது மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆறு மாத இடைவெளிக்குள் சட்ட பேரவை கூட்டம் கூட்டப்படவேண்டும். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. இது மிகவும் முக்கியமானதாக உள்ளதால் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் தற்போது காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.














