ரஞ்சிக்கோப்பையில் கால் இறுதிப் போட்டிக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தமிழக அணி விளையாடியது. இதில் 9 விக்கெட்டு வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 வருடங்களுக்கு பிறகு தமிழக அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் 1 தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து சி பிரிவில் முதல் இடத்தில் தமிழக அணி உள்ளது.














