பெகாசசுக்கு போட்டியாக புதிய உளவு மென்பொருள் வாங்க ஒன்றிய அரசு தீவிரம்

புதிய உளவு மென்பொருள் வாங்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போனை ஒன்றிய அரசு உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு கடும் சர்ச்சை எழுந்தது. ஆனாலும் இந்த உளவு மென்பொருளை ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை என தொடர்ந்து கூறியது. இந்நிலையில், பெகாசசுக்கு போட்டியாக […]

புதிய உளவு மென்பொருள் வாங்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போனை ஒன்றிய அரசு உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு கடும் சர்ச்சை எழுந்தது. ஆனாலும் இந்த உளவு மென்பொருளை ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை என தொடர்ந்து கூறியது.

இந்நிலையில், பெகாசசுக்கு போட்டியாக புதிய உளவு மென்பொருளை வாங்க ஒன்றிய அரசு தற்போது திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.100 கோடி செலவில் உளவு மென்பொருள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஏலத்திற்கு அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் குறைந்தது 24க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu