இங்கிலாந்து அரசர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் பங்கேற்பு

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் மே 6-ந்தேதி காலையில் அரசர் மூன்றாம் சார்லசின் […]

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் மே 6-ந்தேதி காலையில் அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த முடி சூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய அரசு சார்பில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் இங்கிலாந்து நாட்டுக்கு மே 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu