முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது.
கடந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை எட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும், 142 அடியை மட்டுமே அணை எட்டி இருந்தது. இதன் காரணமாக கடந்த டிசம்பர் 18-ம் தேதி இரண்டாம் கட்ட வெள்ள அப்பாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இன்றைய தினத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.