ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்த்துள்ளது

September 30, 2023

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மற்ற பகுதிகளை விட பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணை 143 அடி கொள்ளளவு கொண்டது. இதில் நேற்று முன்தினம் 700 […]

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மற்ற பகுதிகளை விட பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணை 143 அடி கொள்ளளவு கொண்டது. இதில் நேற்று முன்தினம் 700 கன அடி நீர் வந்து கொண்டிருந்தன. கனமழையின் காரணமாக 296 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மேலும் சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை, கொடுமுடியாறு அணை, நம்பியார் அணை ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் விடுமுறை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம், கனமழை, the water level of Papanasam dam increased

தமிழகம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu