நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்ட டிசம்பர் 4 ஆம் தேதி தொடர் தொடங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் மூன்றாவது வாரம் பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும். இது தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். தற்போது ஐந்து மாநில சட்டசபை தேர்தல் காரணமாக நடப்பு ஆண்டிற்கான கூட்டம் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டம் 19 நாட்கள் நடத்தப்பட உள்ளது.இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை அடுத்து டிசம்பர் இரண்டாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.














