அரியானா உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை வழங்கும் பணி தொடக்கம்

மேற்கு வங்கம், அரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்தர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள் இந்து குடியுரிமை பெற முடியும். இந்த சி.ஏ.ஏ நடைமுறையானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் […]

மேற்கு வங்கம், அரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்தர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள் இந்து குடியுரிமை பெற முடியும். இந்த சி.ஏ.ஏ நடைமுறையானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இணையதளம் ஒன்று உருவாக்கியிருந்தது. இதற்கு டெல்லியில் விண்ணப்பித்திருந்தவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் கட்டமாக குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அதிகாரம் பெற்ற மாநில குழு இந்த சான்றிதழை வழங்கும்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu