துபாயில் உருவாகும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

April 29, 2024

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் அமைய உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் துபாய் விமான நிலையம் மிகப்பெரிய விமான நிலையங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், அதை விட 5 மடங்கு பெரியதாக புதிய விமான நிலையத்தை அமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது. சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்படும் புதிய விமான நிலையத்தில் 400 வாயில்களும் […]

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் அமைய உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் துபாய் விமான நிலையம் மிகப்பெரிய விமான நிலையங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், அதை விட 5 மடங்கு பெரியதாக புதிய விமான நிலையத்தை அமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது. சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்படும் புதிய விமான நிலையத்தில் 400 வாயில்களும் 5 ஓடு பாதைகளும் அமைக்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் 25 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்படும் புதிய விமான நிலையத்துக்கு அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி புதிய நகரத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu