நாட்டில் 13.86 லட்சம் அலோபதி டாக்டர்கள்: மத்திய அரசு தகவல்

April 11, 2025

மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 74 கல்லூரிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய கணக்குப்படி நாடு முழுவதும் 13,86,150 அலோபதி டாக்டர்கள் பதிவாகியுள்ளனர். அதேபோல், 7,51,768 ஆயுஷ் டாக்டர்கள் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் இயற்கை மருத்துவம்) உள்ளனர். தற்போது நாட்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டால், 811 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் டாக்டர்கள் உள்ளனர். மருத்துவக் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் மத்திய […]

மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 74 கல்லூரிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதைய கணக்குப்படி நாடு முழுவதும் 13,86,150 அலோபதி டாக்டர்கள் பதிவாகியுள்ளனர். அதேபோல், 7,51,768 ஆயுஷ் டாக்டர்கள் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் இயற்கை மருத்துவம்) உள்ளனர். தற்போது நாட்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டால், 811 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் டாக்டர்கள் உள்ளனர்.

மருத்துவக் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகளும், 51,400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் கல்லூரிகள் எண்ணிக்கை 536 ஆகவும், இடங்கள் 80,312 ஆகவும் உயர்ந்தன. தற்போதைய 2023-24 கல்வியாண்டில், 722 மருத்துவக் கல்லூரிகளும், 1,10,297 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 74 கல்லூரிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40 மற்றும் ஆந்திராவில் 37 கல்லூரிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ். இடங்களில் கர்நாடகம் 11,745 இடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 11,650 இடங்களுடன் 2-வது இடத்தையும், மகாராஷ்டிரா 10,845 இடங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu