டிஜிட்டல் தங்கம் வாங்கினால் சேவை வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் ரூ.26, 600 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தை வாங்கினாலும் அதனை பாதுகாப்பாக வைக்க வீடுகளில் கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் ஜி.எஸ்.டி. வரியில் இருந்தும் விலக்கு பெறலாம். அதாவது நாம் கடைக்கு சென்று ஒரு பவுன் நகை வாங்கினால் அதற்கு தங்கத்தின் விலையுடன் சேர்த்து 2 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இதுவே டிஜிட்டல் தங்கம் வாங்கினால் 2 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால் முதலீட்டு காலத்திற்கு பிறகு அதனை விற்கவோ, அல்லது தங்கமாகவே மாற்றி கொள்ளலாம். இதன்மூலம் தங்கமும் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டம் மூலம் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.