அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு கிரீன் கார்டு - டொனால்ட் டிரம்ப்

June 24, 2024

கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினருக்கு விசா வழங்கும் விவகாரத்தில் ட்ரம்ப் பிற தலைவர்களுக்கு எதிரான கொள்கை வைத்திருந்தார். அவர் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை கொண்டவர். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அவர் அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளார். எனவே குடியுரிமை தொடர்பான தன்னுடைய பேச்சிலிருந்து பின்வாங்கியுள்ளார். சமீபத்தில் அவர் பேசுகையில், கல்லூரிகளில் பட்டம் […]

கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினருக்கு விசா வழங்கும் விவகாரத்தில் ட்ரம்ப் பிற தலைவர்களுக்கு எதிரான கொள்கை வைத்திருந்தார். அவர் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை கொண்டவர். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அவர் அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளார். எனவே குடியுரிமை தொடர்பான தன்னுடைய பேச்சிலிருந்து பின்வாங்கியுள்ளார். சமீபத்தில் அவர் பேசுகையில், கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கல்லூரியில் பட்டம் பெற்றால் அதன் ஒரு பகுதியாக கிரீன் கார்டை பெற்றுக் கொள்ளலாம். இது ஜூனியர் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இல்லையேல் மாணவர்கள் இங்கே படித்து விட்டு தங்கள் சொந்த நாடு சென்று அங்கே தொழில் தொடங்குகிறார்கள். அவர்கள் பில்லியனர்களாகிறார்கள். அதை அவர்கள் இங்கேயே செய்யலாம் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu