திக்கற்றவர்களுக்கு துணை நிற்கும் திருமந்திரம் தந்த திருமூலர்

திருமூலர் மற்றும் திருமூல நாயனார் என இருப்பெயர்களில் சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து எழுதியுள்ள. சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில், 'இடையர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மாரராக போற்றப்படும். சித்தர்களுல் எல்லாம் தலைசிறந்த பெரும் ஞானியாய் வாழ்ந்தவர் தான் திருமூலர். இவர் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி அசுவினி என்றும் பிறந்த ஊர் சாத்தனூர் என்றும் சில குறிப்புகள் உள்ளது. ஆனால் இவர் வரலாற்றை பற்றி வேறு விதமாகவும் கூறுகிறார்கள். திருக்கைலாயத்தில் சிவபெருமானின் திருக்கோயிலுக்கு காவல் இருந்த திருநந்தி தேவரது திருவருள் […]

திருமூலர் மற்றும் திருமூல நாயனார் என இருப்பெயர்களில் சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து எழுதியுள்ள. சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில், 'இடையர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மாரராக போற்றப்படும். சித்தர்களுல் எல்லாம் தலைசிறந்த பெரும் ஞானியாய் வாழ்ந்தவர் தான் திருமூலர்.

இவர் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி அசுவினி என்றும் பிறந்த ஊர் சாத்தனூர் என்றும் சில குறிப்புகள் உள்ளது. ஆனால் இவர் வரலாற்றை பற்றி வேறு விதமாகவும் கூறுகிறார்கள். திருக்கைலாயத்தில் சிவபெருமானின் திருக்கோயிலுக்கு காவல் இருந்த திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணவர்களுள் ஒருவர் அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகி.

இவர் அகத்திய மாமுனிவர் மேல் கொண்ட அன்பினால் அவரோடு சிலகாலம் தங்கி வாழ எண்ணி, திருக்கைலாயத்திலிருந்து புறப்பட்டு தென்திசையை நோக்கி தென்திசையை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்துவிட்டு காஞ்சிபுரம் வந்தார்.

பின் அங்கிருந்து தில்லை போய் திருநடனம் பார்த்து, தொடர்ந்து அங்கிருந்து உமையம்மையார் இறைவனோடு காட்சி தரும் திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டு விட்டுத் திரும்பச் செல்லும் வழியில் காவிரிக் கரையில் அமைந்திருந்த சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்ற இடையன் உயிர் இழந்ததால் அவன் பசுக்கள் வாடுவதை எண்ணி வருந்தி, தன் உடலை ஓரிடத்தில் விட்டு கூடு விட்டு கூடு பாய்ந்து மூலன் உடலில் சென்று உயிர் பெற்ற உடன் பசுக்கள் மகிழ்ந்தன.

ஆனால் மூலன் மனைவியோ சிவயோகி சுந்தர நாதரை தன் கணவன் மூலன் என்று நினைத்து நெருங்க, சிவயோகி ஒரு ஆட்டின் மேல் கூடு பாய்ந்து தன் சக்தியை நிரூபணம் செய்து தான் யோகி என கூறி அங்கிருந்து கிளம்பி தன் பழைய உடலை தேடி போனார். அங்கோ அவர் உடலை காணவில்லை. இறைவனின் விருப்பம் வேறாக இருப்பதாக உணர்ந்து சாத்தனூரிலிருந்து புறப்பட்டு மீண்டும் திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயம் சென்று அங்கிருந்த அரசமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்ய தொடங்கினார். ஆண்டிற்கு ஓரு முறை மட்டும் கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தவத்திற்கு போய்விடுவார்.

இப்படியே மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, மனித நலம் பேண நற்சொல் அருளும் மூவாயிரம் பாடல்களை இயற்றினார். இவை முதலில் ‘தமிழ் மூவாயிரம்’ என்றே அழைக்கப்பட்டது பிற்காலத்தில் இதில் நிரம்பியிருந்த மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல உடலுக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துரைத்துள்ளதால் அதை மூலன் உடலில் இருந்து இவர் எழுதியதால் இவருக்கு திருமூலர் என்ற பெயர் உண்டாகியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதனாலேயே இவர் படைப்பிற்கு “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்று பெயரும் வைத்தார்கள்.

திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடாமல் யாரும் அறியாத வகையில் தான் தவமிருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலய கொடி மரத்தின் கீழ் புதைத்து வைத்து விட்டார், அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து, (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்).

ஆக திருமூலர் காலத்திலிருந்து 7000 வருடங்கள் கழித்து கி.பி. 700 இல் பிறந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, திருஞான சம்பந்தப் பெருமான் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்த போது ஏதோ தோன்றியதால் மண்ணைத் தோண்டச் செய்து, அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் எடுத்து படித்து, உணர்ந்து, அதன் அருமை பெருமைகளை உலகத்தோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருள் செய்தார்.

பின் பிறந்த சேக்கிழார் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாகச் சேர்த்து, திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும், திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி, சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தை பத்தாவது திருமுறையாகத் தொகுத்து வெளியிட்டார்.

திருமூலரின் முக்கிய அறிவுரைகள்

கடவுள் வெளியே இல்லை நம் உள்ளே தான் இருக்கிறார். நம் உள்ளத்தில் அன்பு இல்லாமல் ஆயிரம் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்தாலும் வீண் தான். என்றும் அன்பே சிவம்’ என்பார்கள். இதையே தான் திருமூலரும் நீங்கள் பிறர் மீது உண்மையான அன்பு செலுத்தினால் இறைவனே உங்கள் மீதும் அன்பு செலுத்துவார் என்று கூறுகிறார்.

அதனால் தினமும் அதிகாலையில் எழுந்து திருமூலரின் திருமந்திரப் பாடல்களை அதன் முழுமையான சரியான பொருள் உணர்ந்து உள்ளம் உருகி பாடுபவர்கள் யாராயினும் அவர்கள் தங்கள் பிறவிப் பாசம் விடுத்து இறைவன் சிவனிடம் போய் சேர்வார்கள் என்பதே திருமூலரின் திருவாக்கு. இப்படி, இந்த உலக மக்கள் அனைவரும் நலம் பெற இவ்வளவு அருமையான திருமந்திர மாலையை அருளியபின், திருமூலர் சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து முக்தி பெற்று இறைவன் தில்லை நாதனுடன் கலந்துவிட்டார் என்று திருமூலர் வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu