உலகின் மெலிதான டிஸ்ப்ளே கொண்ட கைபேசியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இருக்கும் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த கைப்பேசியின் டிஸ்ப்ளே 1.55 மில்லி மீட்டர் அளவு தடிமன் கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஷாவ்மி 13 மாடல் கைபேசியின் டிஸ்ப்ளே உலகின் மெலிதானதாக சொல்லப்பட்டது. அது 1.81 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாக இருந்தது. தற்போது அதனை ஐபோன் 15 பின்னுக்குத் தள்ளி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், ஐபோன் 15 கைபேசி மாடலின் வடிவமைப்பு இணையத்தில் கசிந்தது. அதன் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில், டைட்டானியம் பிரேம் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ரேம் வசதிகள் இடம்பெறும் என்று கருதப்படுகிறது.