பறவைகள் தொல்லை தடுக்க ரூ.12 கோடி செலவழிக்கும் திருவனந்தபுரம் விமான நிலையம்!

அரபிக்கடலோர மீனவ கிராமங்களுக்கு அருகில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த ஆண்டு ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரை உள்ள பகுதியில் பறவைகள் மீன்களை இரையாக தேடி திரிந்ததால், விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களில் அவை சிக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு ஆண்டில் பறவைகள் மோதி 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தினமும் 400–500 […]

அரபிக்கடலோர மீனவ கிராமங்களுக்கு அருகில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த ஆண்டு ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.

பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரை உள்ள பகுதியில் பறவைகள் மீன்களை இரையாக தேடி திரிந்ததால், விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களில் அவை சிக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு ஆண்டில் பறவைகள் மோதி 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தினமும் 400–500 குண்டு பட்டாசுகள், 100 ராக்கெட் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. பட்டாசுகளுக்கே மாதம் ரூ.3.3 லட்சம் செலவாகி வருகிறது. மேலும், பட்டாசுகள் வெடிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட 30 பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7.2 லட்சம் செலவிடப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu