திருவண்ணாமலையில் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக சென்னை,வேலூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோயிலுக்கு மகா தீப மலையை சுற்றி பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி புரட்டாசி மாத பௌர்ணமி இன்று தொடங்கி நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில் பக்தர்களின் கூட்டம் கோவில்களில் அலை மோதியது. கோவிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இரண்டு நாட்கள் அமர்வது தரிசனம் சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதற்கு வேலூர் கோட்டத்தில் 130 பேருந்துகளும், திருப்பத்தூரில் 30 பேருந்துகளும்,ஆற்காட்டில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூரில் இருந்து 140 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.