கடந்த நூறு ஆண்டுகளில் உலகின் அதி வெப்பமான மாதமாக நடப்பு ஜூலை மாதம் இருக்கும் என நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
நாசாவில் பணியாற்றும் பிரபல சூழலியல் விஞ்ஞானி கேவின் ஷ்மிட் ஆவார். அவர், "நடப்பு ஜூலை மாதத்தில் உலகெங்கும் பரவலான முறையில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் பதிவான வெப்ப அலை தாக்கங்கள் இதுவரை பதிவான அளவைவிட மிகவும் உயர்வாக இருந்தன. எனவே, இது எல் நினோ விளைவின் தாக்கமாக மட்டுமே இருக்கும் என கூற முடியாது. இதற்கு எல் நினோவும் ஒரு காரணி அவ்வளவே. ஆனால், தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படவில்லை என்றால், 2024 ஆம் ஆண்டு மேலும் வெப்பமயமானதாக இருக்கும். ஏனெனில், எல் நினோ விளைவின் உச்சம் இனிமேல் தான் நிகழ உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், 1000 ஆண்டு கால அளவில் ஒப்பிட முடியாது என்றாலும், நூற்றாண்டு கால அளவில் நடப்பு ஜூலை மாதமே அதி வெப்பமான மாதமாக இருக்கும் என கூறியுள்ளார்.