ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு

February 14, 2023

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் ''HCoI'' செயலியை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி […]

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் ''HCoI'' செயலியை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப்படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்.

ஹஜ் 2023-க்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற மார்ச் 10-ந்தேதி ஆகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu