அமெரிக்காவில் உள்ள 10 மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி, புயல் மற்றும் கனமழையின் காரணமாக ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி, புயல் ஆகியவைகள் அமெரிக்காவின் 10 மாகாணங்களை தாக்கியுள்ளது. இது தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ இடங்களில் கன மழை பெய்தது. மேலும் அங்குள்ள மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை பலத்த காற்றின் காரணமாக விழுந்தன. கனமழையின் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
மேலும் அங்குள்ள மக்கள் சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் ஆகியவற்றிற்கு வாய்ப்பு உள்ளதால் எச்சரிப்புடன் இருக்குமாறு தேசிய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் புயல் தாக்கத்தால் அலுவலகங்கள், உயிரியல் பூங்கா, நூலகங்கள் அருங்காட்சியகம் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான சேவைகளை ரத்து செய்ய மத்திய விமான போக்குவரத்து நிர்வாக உத்தரவிட்டதை தொடர்ந்து 2,600 க்கும் மேற்பட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.