100 மில்லியன் பயனர்களை கடந்த திரட்ஸ்

July 10, 2023

ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக, மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் செயலி கடந்த வாரம் வெளியானது. வெளியீட்டிலிருந்து ஒரு வார காலத்திற்குள் 100 மில்லியன் பயனர்களை பெற்று, திரட்ஸ் சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, 2 மாதங்களில் 100 மில்லியன் பயனர்களை எட்டியது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை திரட்ஸ் முறியடித்து, புதிய வரலாறு படைத்துள்ளது. அத்துடன், அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்தில், 30 மில்லியன் பயனர்களைக் […]

ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக, மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் செயலி கடந்த வாரம் வெளியானது. வெளியீட்டிலிருந்து ஒரு வார காலத்திற்குள் 100 மில்லியன் பயனர்களை பெற்று, திரட்ஸ் சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, 2 மாதங்களில் 100 மில்லியன் பயனர்களை எட்டியது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை திரட்ஸ் முறியடித்து, புதிய வரலாறு படைத்துள்ளது. அத்துடன், அறிமுகம் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்தில், 30 மில்லியன் பயனர்களைக் கடந்து, வேகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக வரலாறு படைத்துள்ளது.

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து ட்விட்டரில் பல அதிரடி மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. ட்விட்டர் ப்ளூ வருகையால், ட்விட்டர் பயனர்கள் குறைய தொடங்கினர். ட்விட்டருக்கு மாற்றாக பல்வேறு செயலிகளுக்கு பொதுமக்கள் மாற்றமடைய தொடங்கினர். இந்த நேரத்தில் திரட்ஸ் வருகை அமைந்ததால், பிரபலங்கள் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் திரட்ஸ் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே, திரட்ஸ் செயலி, ட்விட்டருக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. அதே வேளையில், ட்விட்டரின் முன்னாள் ஊழியர் மூலம், ட்விட்டரை போலவே காபி வெர்ஷன் ஆக திரட்ஸ் அமைந்துள்ளதாக, எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu