மெட்டா நிறுவனத்தின் எழுத்து பதிவு தளமான திரட்ஸ் தளத்தில் புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் திரட்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் தளத்தின் அடிப்படையில், அதன் கூடுதல் தளமாக உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக, ஒருவர் திரட்ஸ் கணக்கை தொடங்கிவிட்டால், அதனை நீக்க முடியாத நிலை இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பயனர்களின் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, திரட்ஸ் கணக்கை நீக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. “தற்போதைய நிலையில், ஒருவர் தனது திரட்ஸ் கணக்கை நீக்க வேண்டும் என்றால், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கையும் நீக்க வேண்டும். ஆனால், பலரும் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடர விரும்புவதாகவும், திரட்ஸ் கணக்கை மட்டுமே நீக்க நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, திரட்ஸ் கணக்கை மட்டும் தனியாக நீக்கும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது” - இவ்வாறு இன்ஸ்டாகிராம் தலைவர் ஆதாம் மோசரி தெரிவித்துள்ளார்.