இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூவர் பலியாகினர்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் உள்ள கிழக்கு ஜெருசலம் பிரதான சாலையில் சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் மூன்று பேர் வாகனத்தில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுற்றினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் மர்ம நபர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பேரும் பாலஸ்தீன நகரமான பெட்லகன் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.