குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவை வ.உ.சி மைதானத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்க உள்ளார். மேலும் சிறப்பாக வேலை பார்த்த போலீசார்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோவில்கள், மசூதிகள் ஆகியவற்றின் தீவிர கண்காணிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை பீளமேடு விமான நிலையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி எழுதிய போது தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.