வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க மூன்றடுக்கு போலீஸ்

April 15, 2024

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபையும், தென் சென்னையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் சேர்ந்து மொத்தம் 18 சட்டசபை தொகுதிகள் வருகிறது. இதில் உள்ள தொகுதிகளில் 48 […]

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபையும், தென் சென்னையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் சேர்ந்து மொத்தம் 18 சட்டசபை தொகுதிகள் வருகிறது. இதில் உள்ள தொகுதிகளில் 48 லட்சத்து 35,672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4680 வாக்குச்சாவடி மையங்களில் 14912 பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதனை அடுத்து வடசென்னைக்கு மேரி கல்லூரியிலும், மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியும் தென் சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு நம்பர் ஒட்டி வரிசைப்படுத்தப்பட்டு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. இதை போல் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் பொழுது அதை வைப்பதற்கான அறை தயார் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறைக்கு யார் யார் பொறுப்பு, அதிகாரிகள் யார் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு அறையை பூட்டி யார் சீல் வைக்க வேண்டும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க என்னென்ன போலீசார் நிறுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu