ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக, எழுத்துப் பதவுகளை மட்டுமே பதிவிடும் புதிய தளம் ஒன்றை டிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய தளத்தில், 1000 எழுத்துக்கள் வரையிலான குறுஞ்செய்தி வடிவ எழுத்து பதிவுகளை பதிவிட முடியும். இது தவிர, எழுத்து பதிவுகளுக்கு பல தரப்பட்ட பின்புலங்களை தேர்வு செய்தல், ஹேஷ் டேக்குகள் அமைத்தல், பிற பயனர்களை டேக் செய்தல் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. கிட்டதட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை போல இந்த பதிவுகள் காட்சியளிக்கின்றன.
ட்விட்டருக்கு மாற்றாக, தொடர்ந்து பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன அவற்றில், இந்தியாவின் கூ, மஸ்டாடூன், ஜாக் டோர்சியின் ப்ளூ ஸ்கை, மெட்டாவின் திரட்ஸ் ஆகியவை அதிக கவனம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாக டிக் டாக் அறிமுகம் செய்துள்ள புதிய செயலியும் இணையும் என கருதப்படுகிறது.