டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ் என்ற சீன நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தனது டிக் டாக் பங்குகளை விற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வந்தது. தற்போது, ‘பங்குகளை விற்கவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்’ என்று மிரட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
டிக்டாக் செயலி மூலம், வாடிக்கையாளர் தரவுகள் கசியப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான பைட் டான்ஸ், டிக்டாக்கில் இருந்து வெளியேறும் பட்சத்தில், டிக்டாக் செயலிக்கு, சீனாவுடனான நேரடி தொடர்பு துண்டிக்கப்படும். எனவே, நிறுவனத்தை வெளியேறக் கோரி அமெரிக்கா கூறியது. டிக்டாக் பங்குகளை விற்கச் சொல்லி நிர்ப்பந்தித்தது. தற்போது வரை, பங்குகள் விற்கப்படவில்லை. அதே வேளையில், தடை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.