டார்வின் ஏஐ நிறுவனத்தை வாங்கிய ஆப்பிள்

March 18, 2024

கனடாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டார்வின் ஏஐ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. சாட் ஜிபிடி வருகைக்கு பிறகு உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் டார்வின் ஏஐ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது, செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் சிறி வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பத்திற்கு இது மேலும் வலிமை சேர்க்கும் விதமாக இருக்கும். […]

கனடாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டார்வின் ஏஐ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.

சாட் ஜிபிடி வருகைக்கு பிறகு உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் டார்வின் ஏஐ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது, செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் சிறி வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பத்திற்கு இது மேலும் வலிமை சேர்க்கும் விதமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை பயன் என்பது தரவு பகிர்வை குறைத்து தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். அந்த வகையில், டார்வின் ஏஐ தொழில்நுட்பம் ஐபோன் சாதனைத்திலேயே செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஏற்படுத்தி தந்து, தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கும் எனக் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் டார்வின் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படும் என சொல்லப்படுகிறது. அத்துடன், ஐபோன் மற்றுமன்றி, ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச், ஐ பேட், கணினி, வி ஆர் ஹெட்செட் போன்றவற்றிலும் டார்வின் ஏ ஐ தொழில்நுட்பம் விரிவாக்கம் செய்யப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu