திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணி

December 20, 2022

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து ரூ.300 கோடி செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, முடி […]

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து ரூ.300 கோடி செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள்,கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திருப்பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் என்று அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu