திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலவகை தங்க காணிக்கைகள் தங்கக் கட்டிகள் ஆக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் காணிக்கையாக பெறப்படும் தங்கங்களை தங்க பத்திரமாக முதலீடு செய்துள்ளனர். இது 168 கிலோ 68 கிராம் 883 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. இதனை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்க கட்டிகளாக முதலீடு செய்துள்ளனர். இது கோவில் நிர்வாகத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 99,77,64,472/-. இதற்கான வட்டி விகிதம் 2.25 சதவீதம். இந்த வட்டி கோவிலின் மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன. இதே போல் விருதுநகர், பெரியபாளையம், திருவேற்காடு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களில் பெறப்பட்ட காணிக்கைகளும் அதே மும்பை வங்கியில் தங்க கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.